அரசு ஆரம்ப சுகாதார நிலையம் - சாதித்த பொன்மார் ஊராட்சி மன்றத் தலைவர்.ஸ்ரீநாரயணன்.!

செங்கல்பட்டு

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் - சாதித்த பொன்மார் ஊராட்சி மன்றத் தலைவர்.ஸ்ரீநாரயணன்.!

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் - சாதித்த பொன்மார் ஊராட்சி மன்றத் தலைவர்.ஸ்ரீநாரயணன்.!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்மார்   ஊராட்சியில் ரூபாய் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சிறு குறு நடுத்தர தொழில்  நிறுவனங்கள் துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான தா.மோ. அன்பரசன் தலைமையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் ஆகியோர் முன்னிலையில் பொன்மார் ஊராட்சி மன்றத் தலைவர் ஸ்ரீ நாராயணன் வரவேற்பில்
தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

சென்னைக்கு அருகில்  மிக வேகமாக வளர்ந்து வரும் ஊராட்சி  பொன்மார் ஊராட்சி மக்களின் அடிப்படைத் தேவைகள் தமிழக அரசால் நிறைவேற்றி வந்தாலும் சுகாதாரத்தில் அடிப்படை தேவையான மருத்துவ வசதியின்றி  பல ஆண்டு காலமாக மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.இதனை மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன்  மூலமாக தமிழக முதலமைச்சர்  மு க ஸ்டாலினிடம் கோரிக்கையாக ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீ நாராயணன் பொதுமக்கள் சார்பாக தெரிவித்ததையடுத்து இன்றைய தினம் மிகச் சிறந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பொது மக்களின் பயன்பாட்டிற்கு காணொளி காட்சி வாயிலாக  மக்கள்  கனவினை நிறைவேற்றினார்.தமிழக முதலமைச்சர்.மக்களின் நீண்ட கால கனவான இப்படி ஒரு மருத்துவ கட்டமைப்பை கொண்டு வர பெரு முயற்சி எடுத்த  ஊராட்சி மன்றத் தலைவர் ஸ்ரீ நாராயணனை பொதுமக்கள் வெகுவாய் பாராட்டினர்.

நிகழ்வில் காஞ்சிபுரம் எம்பி செல்வம், பொன்மார் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தினை திறந்து வைத்தும்., திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, திருப்போரூர் ஒன்றியக் குழுத் தலைவர் எல். இதயவர்மன் ஆகியோர் பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.ஒன்றிய துணைப் பெருந்தலைவர்.காயத்ரி அன்பு செழியன்,தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜி சி அன்பு செழியன், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில் நுட்ப  அணி ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன் ஒன்றியக் குழு உறுப்பினர் மேலக்கோட்டையூர் எல். சுரேஷ்,சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி, திருப்போரூர் ஒன்றிய ஆணையாளர் அரிபாஸ்கர் ராவ், வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள்தேவி,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பி டி வெங்கடேசன், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி தி.மு.க. கிளைக் கழக செயலாளர்கள்  மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்

    சுகுமாரன்