ஊத்தங்கரை அருகே உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜை .!
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அருகே உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொது செயலாளர் டாக்டர் சந்திரமோகன் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள கே.பாப்பாரபட்டி கிராமத்தில் மிகவும் பழமையான காசி விஸ்வநாதர் திருக்கோவில் உள்ளது.
இந்த திருக்கோவிலில் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்க மாநில பொது செயலாளர் டாக்டர் சந்திரமோகன் வருகை தந்து சிறப்பு பூஜையில் கலந்துக் கொண்டு வழிபட்டார். அப்போது உலக மக்கள் யாவரும் நலமுடன் வாழ சிவபெருமானை வேண்டிக் கொண்டார்.
அப்போது நுகர்வோர் சங்க நிர்வாகிகள் ஜெய்சன், பக்தவச்சலம், சிவனடிகளார் ரங்கநாயகி அம்மாள், சங்கீதா, சாந்தா, கிருஷ்ணவேணி, ரம்யா ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ