இலஞ்சி இராமசுவாமி பிள்ளை பள்ளியில் விளையாட்டு விழா!

தென்காசி

இலஞ்சி இராமசுவாமி பிள்ளை பள்ளியில் விளையாட்டு விழா!

இலஞ்சி இராமசுவாமி பிள்ளை பள்ளியில் விளையாட்டு விழா

தென்காசி, நவ - 20

தென்காசி மாவட்டம், இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு இறுதி விளையாட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பள்ளி நிர்வாக குழுத் தலைவர்  சுப்பையா தலைமை வகித்தார். நிர்வாகக் குழு செயலாளர் ஐ. சி. சண்முக வேலாயுதம் , முன்னாள் தலைமை ஆசிரியர் தேசிய நல்லாசிரியர் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஆறுமுகம் விளையாட்டு விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்து  வரவேற்றார்.பள்ளி முன்னாள் மாணவரும் ராமி தகவல் தொழில் நுட்ப நிறுவனருமான நாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை, ஜூனியர் ரெட்கிராஸ், சாரணர் இயக்கம், தேசிய பசுமைப் படை, நாட்டு நலப்பணித் திட்டம் உள்ளிட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைத்து விளையாட்டு விழாவினைத் துவக்கி வைத்தார்.

மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரமோகன், செந்தில் பாபு, பத்திரகாளி , ஆசிரியர்கள் உமா, கற்பகம், சிவா, சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் நடத்தினர்.

மாணவர்கள் அனைவருக்கும் ஆசிரியர்கள் சார்பில் இனிப்பு  வழங்கப் பட்டது. அதன் பின்னர் நடை பெற்ற பரிசளிப்பு விழாவில் வருமான வரித்துறை அலுவலர் மீனாட்சி சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்று வழங்கி வாழ்த்தினார்.

உடற்கல்வி ஆசிரியர் இராஜேஸ்வரி ஆண்டறிக்கை சமர்பித்தார்.ஜூனியர் பிரிவில் கோமு, ஜீவிதா, சீனியர் பிரிவில் பாலகுமார்,முபிலேஷ் ,
ஹரிதா , சூப்பர் சீனியர் பிரிவில் ராம் சூர்யா, கீர்த்திகா ஆகியோர் அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றனர்.

இசை ஆசிரியர் கிருஷ்ணம்மாள் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன.ஆசிரியர் ஐயப்பன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

நல்லாசிரியர் சுரேஷ்குமார் ஒருங்கிணைத்தார்.விழாவில் உதவித் தலைமை ஆசிரியர்கள் சித்திரை சபாபதி, சொர்ண சிதம்பரம், செல்லம்மாள், முத்தையா, இளமுருகு , மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ராமலட்சுமி நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்