தென்காசி உச்சினி மாகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா .!

தென்காசி

தென்காசி உச்சினி மாகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா .!

ஜுலை 7ல்

தென்காசி உச்சினி மாகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 

தென்காசி ஜூலை 2

தென்காசி வடக்கு ரத வீதியில் அமைந்துள்ள 
ஸ்ரீ உச்சினி மாகாளி அம்மன் திருக் கோயில் மஹா கும்பாபிஷேக விழா ஜூலை ஏழாம் தேதி திங்கட்கிழமை காலை 6 மணிக்கு மேல் 6:45க்குள் நடை பெறுகிறது.

கும்பாபிஷேக நிகழ்ச்சியை முன்னிட்டு ஐந்தாம் தேதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் மங்கள இசை அனுக்ஞை, ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை மஹா சங்கல்பம் புண்யாக வாசனம் ஸ்ரீ மகா கணபதி ஹோமம் நவக்கிரஹ ஹோமம் ஸ்ரீ சுதர்சன ஹோமம் ஸ்ரீ லெஷ்மி ஹோமம் கோ பூஜை பிரம்மச்சாரி பூஜை கன்யா பூஜை சுமங்கலி பூஜை தம்பதி பூஜை பூர்ணாஹீதி தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் அன்று மாலை 5:30 மணிக்கு மேல் மங்கள இசை, அனுக்ஞை வாஸ்து சாந்தி, ப்ரவேஸ பலி ம்ருத்ஸங்க்ரஹணம், பாலிகா ஸ்தாபனம் ரக்ஷா பந்தனம் அங்குரார்ப்பணம் 
கட ஸ்தாபனம் தீர்த்த சங்கர ஹணம் கும்ப அலங்காரம் கலா கர்ஷணம் யாகசாலைபிரவேசம் முதல் கால யாகசாலை பூஜை ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை பிரசாதம் வழங்குதல் 6ம் தேதி காலை 8 மணிக்கு மேல் மங்கள இசை சிவ சூர்ய பூஜை ஸோம கும்ப பூஜை இரண்டாம் கால யாகசாலை பூஜை பஞ்சாஸன பூஜை வேதிகா பூஜை ஹோமம் பூர்ணாஹீதி தீபாராதனை பிரசாதம் வழங்குதல், மாலை 6 மணிக்கு மேல் மங்கள இசை பூர்வாங்க பூஜைகள் சயனாதி வாசம் தான்யாதி வாசம் மூன்றாம் கால யாகசாலை பூஜை ஹோமம் பூர்ணாஹூதி தீபாராதனை பிரசாதம் வழங்குதல் இரவு 9 மணிக்கு மேல் யந்திர ஸ்தாபனம் நடைபெறுகிறது

7ம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு மேல் மங்கள இசை பிம்பசுத்தி மூர்த்திகள் ரக்ஷா பந்தனம் நான்காம் கால யாகசாலை பூஜை ஹோமம் ஸ்பர்ஸாஹீதி நாடி சந்தானம் நயளோன் மீளமை யாத்ரா தானம் கும்பங்களை எழுந்தருளச் செய்து கடம் புறப்பாடு அதனை தொடர்ந்து ஸ்ரீ உச்சினி மாகாளி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் விமான கலசங்களுக்கு காலை 6 மணிக்கு மேல் 6:45க்குள் புனரா வர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது

அதனைத் தொடர்ந்து மஹா அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் காலை 10 மணி முதல் அன்னதானமும் நடைபெறுகிறது. 8ம் தேதி செவ்வாய்க் கிழமை முதல் மண்டல பூஜை நடைபெறும்.

கும்பாபிஷேகத்தை தென்காசி சங்கர் கணேஷ் சர்மா நடத்தி வைக்கிறார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் சீத்தாராமன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

செய்தியாளர்

AGM கணேசன்