சீதபற்பநல்லூரில் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவி பலி.!

தென்காசி

சீதபற்பநல்லூரில் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவி பலி.!

சீதபற்பநல்லூரில் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவி பலி

தென்காசி, டிச - 10

நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூரில் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் மகள் விஜி முத்துக்கனி (வயது 18). இவர் ஆலங்குளத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். 

நேற்று காலை நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் சான்றிதழ் வாங்குவதற்காக தனது உறவினரான ஆலங்குளத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் சொக்கலிங்கம் (வயது 26) என்பவரது பைக்கில் ஏறி சென்றுள்ளார். வேலை முடிந்து மதியம் இருவரும் ஆலங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

சீதபற்பநல்லூரை அடுத்து சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற லாரியை சொக்கலிங்கம் முந்த முயன்றபோது சாலையின் குறுக்கே மாடு வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக சொக்கலிங்கம் பிரேக் போட்டபோது கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பக்கவாட்டில் இருவரும் விழுந்தனர் அப்போது விஜி முத்துக்கனி தலையில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.சொக்கலிங்கம் பலத்த காயமடைந்தார்.

 இதுகுறித்து தகவல் அறிந்த சீதபற்ப நல்லூர் காவல் ஆய்வாளர் முத்து லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த சொக்க லிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த விஜி முத்துக்கனியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்

AGM கணேசன்