சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் முப்பெரும் விழா .!

தென்காசி

சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் முப்பெரும் விழா .!

சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் முப்பெரும் விழா

திருச்சி வேலுச்சாமி பங்கேற்பு

தென்காசி ஆகஸ்ட் 19

தென்காசி மாவட்டம் சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் 79வது சுதந்திர தின விழா காமராஜர் பிறந்த நாள் விழா சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகனுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் முரளி ராஜா நகர காங்கிரஸ் தலைவர் எஸ் கே டி ஜெயபால் ஆகியோர் தலைமை வகித்தனர் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ் பழனி நாடார் எம்எல்ஏ சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் தையல் இயந்திரங்கள் விவசாய உபகரணங்கள் இஸ்திரி பெட்டி தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு தொகை வழங்கி காங்கிரஸ் பேச்சாளர் திருச்சி வேலுச்சாமி சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் சட்டநாதன், மாநில பேச்சாளர்கள் ஆலடி சங்கரைய்யா, ஆய்க்குடி பெரியசாமி திருஞானம் சகோதரி சண்முக சுந்தரம்,மாவட்ட துணைத் தலைவர் சண்முகவேல்,மாவட்ட பொதுச் செயலாளர் ஏஜிஎம். கணேசன் சிங்கராஜ் தேவேந்திரன் மோகன் பழனி குமார் வட்டாரத் தலைவர்கள் பெருமாள், முருகையா குற்றாலம் துரை, கவுன்சிலர்கள் பால சுப்பிரமணியன், அமுதா சந்திரன், வேல்முத்து ராஜ்குமார் உஷா பேபி, பிரபு இளைஞர் காங்கிரஸ் விஜயராஜ், ராஜீவ் காந்தி, நகர துணை தலைவர்கள் ஆறுமுகம், சுரேஷ், மணிகண்டன், செல்வம் மற்றும் டாக்டர் ஜெயச்சந்திரன், சாலமன் கந்தையா, ஆனந்த் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்