உள்ளாட்சிகளில் நியமனம் செய்யப் பட்ட மாற்றுத் திறனாளிகள் ஜெயபாலனிடம் வாழ்த்து பெற்றனர்.!
தென்காசி
உள்ளாட்சிகளில் நியமனம் செய்யப் பட்ட மாற்றுத் திறனாளிகள் ஜெயபாலனிடம் வாழ்த்து பெற்றனர்.
தென்காசி நவ 19
தென்காசி தெற்கு மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் நியமனம் செய்யப்பட்ட மாற்று திறனாளிகள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் படி, மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மாவட்டத்தில் உள்ள அனைத்து யூனியங்களிலும் மாற்றுத்
திறனாளிகளுக்கு நியமன ஒன்றிய கவுன்சிலர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சான்றிதழ் வழங்கினார்.
அதில் நியமனம் செய்யப் பட்ட மாற்றுத் திறனாளிகளான கடையம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இஸ்ரேல் தாமஸ், செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேவி, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முருகேசன், ஐயப்பன், வீரபாண்டியன், ஜெகநாதன், முருகேசன், மந்திரி ஆகியோர் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலனை அவரது மாவட்ட அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந் நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், ரமேஷ், வீராணம் ஷேக் முகம்மது, மேலகரம் பேரூர் செயலாளர் சுடலை, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ராமராஜ், முத்து சுப்பிரமணியன், பிரேம்குமார், மாற்றுத்
திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் மணி, மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட மகளிர் அணி உமா மகேஸ்வரி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
