1,350 மாணவ மாணவியர்களுக்கு மொத்தம் ரூ.64 இலட்சத்து 81 ஆயிரத்து 580 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.!

கிருஷ்ணகிரி

1,350 மாணவ மாணவியர்களுக்கு மொத்தம் ரூ.64 இலட்சத்து 81 ஆயிரத்து 580 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.!

கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை சார்பாக அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மொத்தம் 1,350 மாணவ மாணவியர்களுக்கு மொத்தம் ரூ.64 இலட்சத்து 81 ஆயிரத்து 580 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார். 

உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் மற்றும் தலைமையாசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ