தென்காசி தோட்டக்கலைத் துறை சார்பில் தென்னை, மற்றும் வாழை பயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.!
தென்காசி
தென்காசி தோட்டக்கலைத் துறை சார்பில் தென்னை, மற்றும் வாழை பயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
தென்காசி, நவ - 14
தென்காசி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களான தென்னை மற்றும் வாழை பயிர் பாதுகாப்பு குறித்த விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தோட்டக்கலை பயிர்களான தென்னை மற்றும் வாழை அதிக அளவில் பயிரிடப் படுகிறது. தோட்டக் கலை உதவி இயக்குனர் தஙகம் தோட்டக்கலை அலுவலர் முத்துப்ரியா, உதவி தோட்டக்கலை அலுவலர் மலர் செல்வி மற்றும் வேளாண் விஞ்ஞானி இளவரசன் ஆகியோர் பார்வையிட்டு ஒருங்கிணைந்த நோய் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்த விழிப்புணர்வை விவசாயிகளுக்கு வழங்கினர்.
அதன்படி ஆயிரப்பேரியில் விவசாயிகளின் தென்னை மரங்களை பார்வையிட்டனர். சிவப்புக் கூண்வண்டு, சுருள் வெள்ளை ஈ, வேர்வாடல் நோய், குருத்தழுகல் போன்ற பூச்சி மற்றும் நோய்கள் கண்டறியப்பட்டு அதனை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி கூறப்பட்டது.
அதன்படி சிவப்புக் கூண்வண்டை கட்டுப்படுத்த மூன்று முதல் ஐந்து வயதுடைய மரங்களுக்கு 10 கிலோ தொழு உரம், ஒருகிலோ வேப்பம் புண்ணாக்கு மறறும் மெட்டாரைசியம் 500 கிராம் கலந்து இட வேண்டும்.சிறிய மரங்களில் பாளை இடுக்குகளில் பாச்சா உருண்டைகளை வைப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
மேலும் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டும் பொறிகள் ஒரு ஹெக்டருக்கு 10 என்ற அளவில் வைக்க வேண்டும். தென்னையில் வேர் வாடல் நோயை கட்டுப்படுத்த ஊடு பயிர் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட மரங்களின் இலைகள் பழுப்பு மஞ்சள் நிறத்தில் தொங்கிய நிலையில் காணப்படும். அதிக பாதிப்பு உள்ள மரங்கள் மகசூல் தருவதைநிறுத்தி விடும் அவற்றை அகற்றிவிட்டு புதுகன்றுகள் நடவேண்டும்.
குருத்தழுகல் நோயை கட்டுப்படுத்த மரங்களின் மேல் பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மரங்களின் குருத்துகளில் போர்டாக்ஸ் கரைசல் (1 கிராம்/லிட்டர்) ஊற்றி அவற்றை நோயிலிருந்து மீட்கலாம்.
வடகரை கீழ்ப்பிடாகையில் வாழை வயல்கள் பார்வையிடப்பட்டு மஞ்சள் வாடல் நோயை கட்டுப் படுத்தும் வழி முறைகள் பற்றி எடுத்துக் கூறப் பட்டது. கன்றுகளை தேர்வு செய்யும்போது தரமான1.5 கிலோ உள்ள கன்றுகளை தேர்வு செய்து அதனை நடவு செய்வதற்கு முன்பு கார்பன்டெஸிம் (2கிராம்/1 லிட்டர்) என்னும பூஞ்சாணத்தில் 15 நிமிடம் ஊறவைத்து நட வேண்டும் மேலும் கார்பன்டெஸிம் பூஞ்சாணத்தை ஒரு லிட்டருக்கு இரண்டுகிராம் என்ற அளவில் கலந்து ஊசி மூலமாக 7 மாத வயதுடைய மரங்களுக்கு 20 மில்லி லிட்டர் செலுத்துவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
தற்பொழுது தோட்டக்கலைத் துறையில் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டும் பொறி மற்றும் கிரைசொ பெர்லா ஒட்டுண்ணிகள்
வழங்கப் படுகிறது.
எனவே தேவைப்படும் தென்காசி வட்டார விவசாயிகள் ஆதார் கார்டு நகல், ரேஷன்கார்டு நகல், கம்ப்யூட்டர் பட்டா, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் அடங்கலுடன் தென்காசி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
செய்தியாளர்
AGM கணேசன்
