கொள்ளிடம் ஆற்றில் வெள்ள அபாயம். மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.!
தஞ்சாவூர்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ள அபாயம். மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
காவிரியில் ஆற்றில் 50.000 கன அடி முதல் 75.000 கன அடி முதல் நீர் எந்த நேரத்திலும் திறந்து விடப்படலாம். தஞ்சை மாவட்டத்தில் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், ஆற்றில் யாரும் இறங்கவேண்டாம் என்றும், சிறுவர்கள் செல்ல வேண்டாம். யாரும் செல்பி எடுக்க வேண்டாம். விவசாயிகள் கரையோரமாக ஆடு மாடுகளை அழைத்துச்செல்ல வேண்டாம் என்றும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கோவிந்த நாட்டுசேரிமுன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் உள்பட அரசு அதிகாரிகள் அனைவரும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தகவல்களை பரிமாறி வருகின்றனர்.
செய்தியாளர்
பாபநாசம் இன்பம்