உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு தென்காசி சாந்தி பன்னோக்கு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

தென்காசி

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு தென்காசி சாந்தி பன்னோக்கு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு தென்காசி சாந்தி பன்னோக்கு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி நவ 14

உலகளவில் மக்களை அதிகளவில் பாதித்து வரும் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தும் வகையில் நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு தினமாக அனுசரிக்கப்
படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு தென்காசி மாவட்டத்தில் மருத்துவ சேவையில் அனைத்து வசதிகளையும் கொண்டு சிறப்பாக செயல்பட்டுவரும் சாந்தி பன்னோக்கு மருத்துவமனை சார்பில் உலக நீரிழிவு தினம் விழிப்புணர்வு தினமாக நடை பெற்றது.

சாந்தி பன்னோக்கு மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவரான டேவிட் செல்லத்துரை நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மருத்துவர் அன்பரசன் வரவேற்புரை ஆற்றினார். மருத்துவர் செல்வரங்கராஜ் நீரிழிவு பற்றிய உரை ஆற்றினார்.

மருத்துவர்கள் முத்துகுமாரசாமி, கார்த்திகேயன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை
ஆற்றினர்.

மருத்துவர்கள் தமிழரசன்,கௌதமி தமிழரசன் ஆகியோர் விழா தலைமையுரை ஆற்றினர்.

இந்நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு இலவசமாக ரத்த மாதிரிகள் எடுக்கப் பட்டு உடனுக்குடன் ஆய்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

நீரிழிவு நோயாளிகள் தங்களை எவ்வகையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதனை விளக்கும் பல்வேறு ஸ்டால்கள் அமைக்கப்பட்டு அதில் விளக்கப் படங்கள் காட்சி படுத்தப்பட்டதோடு, அங்கிருந்த மருத்துவர்கள் அதற்கான விரிவான விளக்கங்களையும் பொதுமக்களுக்கு எடுத்துக்கூறினர்.

விழாவில் நர்ஸிங் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாணவிகள் மற்றும் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விழாவில் தீர்வுகள் சொல்லப்பட்டது. வெற்றிகரமாக நடைபெற்ற இந்த விழாவானது தென்காசி மாவட்ட மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து ஆண்டுதோறும் மருத்துவமனை சார்பில் நடத்தப்படும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

முடிவில் மருத்துவர் சுரேஷ் நன்றி கூறினார்.

செய்தியாளர் 

AGM கணேசன்