தென்காசியில் இந்தியா கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் .!

தென்காசி

தென்காசியில் இந்தியா கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் .!

தென்காசியில் இந்தியா கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 

 தென்காசி நவ 10

திமுக தலைவர் மு க ஸ்டாலின் உத்தரவின் படி தமிழகம் முழுவதும் இன்று எஸ் ஐ ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து அதன் ஒரு பகுதியாக தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சார்பில்  தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார்.

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் முன்னிலை வகித்தார். மத்திய அரசையும் தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பபட்டனர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சதன் திருமலை குமார், ராஜா, ராணிஎம்.பி மதிமுக தி.மு ராஜேந்திரன்,ராம உதயசூரியன், வெங்கடேஷன், மாவட்ட துணைச் செயலாளர் கனிமொழி  திமுக பொதுக்குழு உறுப்பினர் ரஹீம், சாமித்துரை, பேரூர் செயலாளர்கள் சங்கர் என்ற குட்டி, சுடலை, நகர செயலாளர்கள் சாதிர், வெங்கடேஷன், மனிதநேய மக்கள் கட்சி சலீம், காங்கிரஸ் காமராஜ்,  உதயகிருஷ்ணன், சலீம், சண்முகவேல், வட்டார தலைவர்கள் பெருமாள், கதிரவன், சிவகிரி திருஞானம், வழக்கறிஞர் கணேசன்,மாரிமுத்து, நகர தலைவர்கள் மாடசாமி ஜோதிடர், பால்ராஜ், ராமர், கம்யூனிஸ்ட் பொன்னுதாய், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் செய்யது பட்டாணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி வல்லம் செல்வம், ஜான்தாமஸ், தொகுதி பார்வையாளர் கலைக்கதிரவன், திமுக ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், ரமேஷ், திவான் ஒலி மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முகமது யாக்கூப், ஆதித்தமிழர் கட்சி ஆதவன், தமிழ் புலிகள் சந்திரசேகர், ஆதிதமிழர் பேரவை கலிவருணன், எஸ் டி பி ஐ செய்யது முகமது,  உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில வர்த்தக அணி இணை செயலாளர் முத்துச்செல்வி நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்