மேலகரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் .!

தென்காசி

மேலகரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் .!

மேலகரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தொடங்கி வைத்தார்

தென்காசி ஆகஸ்ட் 24


தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சிக்குட்பட்ட
 8 முதல் 15 வார்டுகளுக்கு
இரண்டாம் கட்ட உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் இன்று மேலகரம் திரிகூடராசப்ப கவிராயர்  திருமண மண்டபத்தில் வைத்து நடை பெற்றது. இம் முகாமிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் வேணி வீரபாண்டியன் தலைமை வகித்தார்.

துணைத்தலைவர் ஜீவானந்தம், திமுக பேரூர் செயலாளர் சுடலை, ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், முன்னிலை வகித்தனர். பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் அமானுல்லா வரவேற்றார். முகாமில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொது மக்களிடம் மனுக்களை பெற்று துவக்கி வைத்தார்.

இம் முகாமில் கவுன்சிலர்கள் சுந்தரம் என்ற சேகர், கபிலன், செல்வமணி, பூமா, தங்கம்மாள், சிங்கத்துரை, நாகராஜ்சங்கர், சுமித்ரா, மகேஸ்வரன்,  திமுக  அவைத்தலைவர் சலீம், பூபதி, மாவட்ட பிரதிநிதி சம்முகுட்டி, பொருளாளர் ரமேஷ்குமார், குமாரவேல், பாலசுப்பிரமணியன், பாலு, சுந்தர், கதிர், குருசாமி, கணேசன், கனி, முருகன், விக்னேஷ், மாரி, பட்டன், குத்தாலிங்கம், சந்திரன், மணி என்ற ஈஸ்வரன், அறங்காவலர் குழு உறுப்பினர் வீரபாண்டியன், ஆவின் முருகன், குற்றாலம் குத்தாலிங்கம், பேரூராட்சி மன்ற பணியாளர்கள் முப்புடாதி, தங்கராஜ், முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்