புளியங்குடியில் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.!

தென்காசி

புளியங்குடியில் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.!

புளியங்குடியில் நகர காங்கிரஸ் நிர்வாகிகள்
ஆலோசனை கூட்டம்

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகர காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் கூட்டம்   முன்னாள் எம்.பி ஸ்ரீ சங்கர பாண்டியன் பிள்ளை  இல்ல வளாகத்தில் நடை பெற்றது. 

கூட்டத்திற்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முன்னாள் கவுன்சிலர் பால் ராஜ் தலைமை வகித்தார். 

மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்  கோமதிநாயகம், மாவட்ட காங்கிரஸ் செயலாளரும், நகர் மன்ற உறுப்பினருமான சங்கர நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில், பி.ஜே.பி.கட்சியின் 'வாக்கு திருட்டுக்கு' துணை போன தேர்தல் ஆணையத்தையும், பி.ஜே.பி. கட்சியையும் நாடு முழுவதும் அம்பலப்படுத்திய பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்தும் விதமாகவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பி.ஜே.பி. கட்சியையும், அதன் கூட்டாளியான தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து புளியங்குடி நகரில் கண்டன பேரணி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

 புளியங்குடி நகராட்சிக்கு கோரிக்கை வைக்கும் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 

இதில், மாவட்ட பிரதிநிதிகள்  நாராயணன் ,
அம்மையப்பன், 'கலர்ஸ்' ராஜா முகமது ஜாகிர் உசேன்,
 
நகர காங்கிரஸ் துணை தலைவர்கள்  ஈஸ்வரமூர்த்தி, ராஜ் என்ற அருணாசலம், தங்கையா  'ஐடியல்'சித்திக்அலி, 

பொதுச் செயலாளர் முகமது ஜவகர்லால், 
செயலாளர்கள்  முத்துராம சுப்பையா, அசோக்குமார்,  கிருஷ்ண மூர்த்தி, 

பொருளாளர் 'பாண்டிச்சேரி' சுப்பையா 

மாவட்ட செயற்குழு உறுப்பினர்  பழனிச்சாமி,  

INTUC மாவட்ட தலைவர் அரசையா, கவுரவ தலைவர்  இராசு,சேவியர் அந்தோணி ராஜ், 
 'ரியல் எஸ்டேட்' முருகையா,

இளைஞர் காங்கிரஸ்  முன்னாள் மாவட்ட துணை தலைவர் ஜான் அகஸ்டின் ராஜா,மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் மைதீன் பிச்சை, நகர காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் ஜாகிர் உசேன், துணைத் தலைவர் முகமது முத்தலிப்,செயலாளர் சையது மசூது,
 மாவட்ட காங்கிரஸ் இலக்கிய அணி செயலாளர் அந்தோணி என்ற ராஜா, நகர காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் 'பாக்யா' பரமசிவன்,  மணிகண்டன், நாகூர் மைதீன்,  கருணாகரன்,  மாணிக்கவாசகம்,  ராமையா,  சுடலையாண்டி, 
மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் இளைஞர் காங்கிரஸ் செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்