குற்றாலம் ரோட்டரி சங்கம் சார்பில் சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு விழா .!

தென்காசி

குற்றாலம் ரோட்டரி சங்கம் சார்பில் சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு விழா .!

குற்றாலம் ரோட்டரி சங்கம் சார்பில் சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு விழா

தென்காசி,ஆக.21

குற்றாலம் ரோட்டரி சங்கம் சார்பில் 10 மற்றும் பிளஸ்2 தேர்வில் அரசுப் பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கம்,
பரிசுக்கோப்பை, மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

குற்றாலம் ரோட்டரி சங்க அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் சைரஸ் தலைமை வகித்தார். தொழிலதிபர் அழகராஜா முன்னிலை வகித்தார்.

ரோட்டரி முன்னாள் ஆளுநர் ராஜகோபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 10 மற்றும் பிளஸ்2 அரசுப்பொதுத் தேர்வில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்ற மாணவ,மாணவிகள் 45 பேருக்கு ரொக்கம்,பரிசுக்
கோப்பை, மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.

கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட சங்க தலைவர் முருகன்,செயலர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கப் பட்டது.

ரோட்டரி முன்னாள் ஆளுநர்பாஸ்கரன்,
முன்னாள் உதவி ஆளுநர்கள்  அருணாசலம்,
ராமகிருஷ்ணன்,
டாக்டர்.அப்துல்அஜீஸ்தென்காசி நகர்மன்ற துணைத் தலைவர் சுப்பையா, முன்னாள் தலைவர்கள் சந்திரன், கல்யாண குமார், சங்கரன்,நிர்வாகிகள் கண்ணன்,ராதா
கிருஷ்ணன்,நாராயணராஜா,ராமநாதன்,
மருதையா, வழக்கறிஞர் மாடசாமிபாண்டியன், ராமசாமி, கலந்துகொண்டனர்.நிகழ்ச்சிகளை கணேசமூர்த்தி தொகுத்து வழங்கினார். பொருளாளர் திருவிலஞ்சிக்குமரன் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்