மேலகரம் பேரூராட்சியில் 79 வது சுதந்திர தின விழா .!

தென்காசி

மேலகரம் பேரூராட்சியில் 79 வது சுதந்திர தின விழா .!

மேலகரம் பேரூராட்சியில் 79 வது சுதந்திர தின விழா

பேரூராட்சி தலைவர் வேணி வீரபாண்டியன் தேசிய கொடியினை
ஏற்றினார்.

தென்காசி ஆகஸ்ட் 15

தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சியில் 79வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு 
மேலகரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேணி வீரபாண்டியன் தலைமை வகித்து தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந் நிகழ்ச்சியில் மேலகரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜீவானந்தம் நிர்வாக அதிகாரி அமானுல்லா மேலகரம் பேரூர் திமுக செயலாளர் சுடலை கவுன்சிலர்கள் சுந்தரம் என்ற சேகர் கபிலன் சிங்கத்துரை பேரூராட்சி அலுவலர்கள் முப்புடாதி தங்கராஜ் மற்றும் அலுவலக பணியாளர்கள் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்