இலஞ்சி பேரூர் திமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சி .!
தென்காசி

இலஞ்சி பேரூர் திமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சி
தென்காசி செப் 15
தென்காசி மாவட்டம், இலஞ்சி பேரூர் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின்
117 வது பிறந்தநாள் நிகழ்ச்சி இன்று இலஞ்சி பேரூர் திமுக அலுவலகத்தில் வைத்து நடை பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு இலஞ்சி பேரூர் கழக செயலாளர் முத்தையா தலைமை வகித்து
அலங்கரிக்கப் பட்ட அன்னாரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம் என்கிற உறுதி மொழியினை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
இந் நிகழ்வில் முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமையா என்ற துரை, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன், பேரூராட்சி தலைவர் சின்னத்தாய் சண்முகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் சுடலையாண்டி, ஜெயக்குமார்பாண்டியன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சண்முக நாதன், ஒன்றிய பிரதிநிதிகள் பூவையா, கணேச மூர்த்தி, துணை செயலாளர்கள் நவநீதகிருஷ்ணன், தேவிகுமார், வார்டு செயலாளர்கள் செல்லப்பா, அங்கப்பன், செண்பக குமார், சிவக்குமார், பி எல் எ 2 அறிஞர், சிவசங்கர், ராஜேந்திர கணேசன், இசக்கி, சக்திவேல், ராமசுப்பிரமணியன்,
சிவ கார்த்திகேயன், காளிராஜ், மருதாச்சலம், இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் முத்து விநாயகம், கணேசன், பரதன், கந்தையா, பேரூர் கழக எழுத்தாளர் முருகன், கொட்டாகுளம் ராமர், உறுப்பினர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்