சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர். !

தென்காசி

சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர். !

தென்காசி மாவட்டம் ,வாசுதேவ
நல்லூர்  ஊராட்சி ஒன்றியம்  ஆத்துவிளை பிள்ளையார் கோவில் தெருவில்  உள்ள குழந்தைகள் மையத்தினையும்,  சட்டமன்ற உறுப்பினர் நிதியில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகத்தினையும், கோட்டையூர்  ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டும், அரசு தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டும்,  தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையினை பார்வையிட்டும்,  சுப்பையாபுரம் கிராமத்தில்   சுடுகாட்டில் அமைக்கப்பட்டுள்ள காத்திருப்போர் கூடத்தினையும்,  மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினையும் பார்வையிட்டும்,   திருமலாபுரம் கிராமத்தில்   நூலகத்தில் அடிப்படை வசதிகளை பார்வையிட்டும்,  அரசு தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகளை பார்வையிட்டும், கால்வாய்  தூர் வாரும் பணிகளை பார்வையிட்டும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், கூடலூர்   கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டும், அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடிடம் அமைக்கும் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்  ஏ.கே.கமல்கிஷோர்,   நேரில்  பார்வையிட்டு  ஆய்வு  மேற்கொண்டார்.

செய்தியாளர்

AGM கணேசன்