கிருஷ்ணகிரியில் திமுக மாநில வர்த்தக அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் திமுக மாநில வர்த்தக அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி தேவராஜ் மஹாலில் நடைபெற்ற திமுக வர்த்தக அணியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில், மாநில துணை செயலாளர் கேவிஎஸ் சீனிவாசன் வரவேற்றார். மாநில செயலாளர் கவிஞர்.காசி முத்துமாணிக்கம் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் அன்பரசன் வரவேற்றார்.
இக்கூட்டத்தில், தாயுமானவர் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம், உங்களுடன் ஸ்டாலின், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது. தவெக மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் குறித்து தரம் தாழ்ந்து பேசிய, அக்கட்சியின் தலைவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாநில வர்த்தகர் அணியின் செயலாளர் காசிமுத்துமாணிக்கம் கூறியதாவது: மதுரையில் தவெக மாநாடு சினிமா படப்பிடிப்பு போல் நடந்துள்ளது. தமிழக முதல்வரை, தவெக தலைவர் விஜய் மிகவும் தரம் தாழ்ந்து பேசியுள்ளார். இது கண்டனத்திற்குரியது. இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடாமல், கட்சியில் மூத்த நிர்வாகிகள் யாரும் இன்றி கட்சி ஆரம்பித்த உடனே முதலமைச்சராக வேண்டும் என கனவில் இருக்கும் விஜய்-க்கு வருகிற தேர்தலில் பொதுமக்கள் மரணஅடி கொடுப்பார்கள். இதன் பிறகு நாட்டில் எந்த நடிகரும் முதல்வர் கனவுடன் அரசியலுக்கு வர மாட்டார்கள்.
பிரதமர் மோடி வருகின்ற தீபாவளி அன்று சிறு குறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில் ஜிஎஸ்டி-யில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி-யை முழுமையாக நீக்கும் நாள் தான் வியாபாரிகள், பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான நாளாகும். அரசியலமைப்பு 130-வது திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும், என்றார்.
இக்கூட்டத்தில் மாநில வர்த்தகர் அணி நிர்வாகிகள் பழஞ்சூர் செல்வம், மோகன், மாலைராஜா, ஜெயன், கோவை முருகவேல், பாண்டிச்செல்வம், முத்துசெல்வி, தாமரைபாரதி, வி.பி.மணி, தனசெல்வம், பல்லவிராஜா, ராமகிருஷ்ணன், தர்மசெல்வன், சத்தியமூர்த்தி, வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் சிறந்த சகோதரன் விருது பெற்ற அரிமா கே.எஸ்.தனசேகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூபதி,முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கருணாநிதி, சந்தூர் காமராஜ் உட்பட 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் மணி விஜயன் நன்றி கூறினார்.
செய்தியாளர்
மாருதி மனோ