களர்பதி ஊராட்சி சமத்துவபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.47.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், மத்தூர் வடக்கு ஒன்றியம், களர்பதி ஊராட்சி சமத்துவபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.47.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் அமைக்கும் பணிகளுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்.MLA பூமி பூஜை செய்து இனிப்புகளை வழங்கி துவக்கி வைத்தார்.

உடன் பள்ளி ஆசிரியர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கழகத் தோழர்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
