வாக்குச்சாவடிகள் தோறும் தேர்தல் பணியாற்ற நிர்வாகிகள் நியமித்து புத்தகங்கள் வழங்கிய அதிமுக துணை பொதுச்செயலாளர்.!
கிருஷ்ணகிரி

வேப்பனஹள்ளி தொகுதியில் வாக்குச்சாவடிகள் தோறும் தேர்தல் பணியாற்ற நிர்வாகிகள் நியமித்து புத்தகங்கள் வழங்கிய அதிமுக துணை பொதுச்செயலாளர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகள் தோறும் அதிமுக சார்பில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணியாற்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது
அதன்படி அதிமுகவின் சூளகிரி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகள் தோறும் தேர்தல் பணியாற்ற நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு சூளகிரியில் உள்ள அதிமுக வேப்பனஹள்ளி தொகுதி அலுவலகத்தில் அதிமுக துணை பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எம் எல் ஏ,அவர்கள் ஆலோசனை வழங்கிய பின்னர் தேர்தல் பணிகள் மேற்கொள்ள வாக்காளர்கள் பட்டியல் அடங்கிய புத்தகங்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சி அதிமுக சூளகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது,
உடன் மாவட்ட பொருளாளர் மல்லையா, எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் ரங்கநாத், பேரவை மாவட்ட துணை செயலாளர் கேசவன், கலை பிரிவு மாவட்ட செயலாளர் ஆனந்தன், பாசறை மாவட்டத் துணை செயலாளர் சிவா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜப்பா, சிவராஜ், ராமகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜா, ரமேஷ், பழனி, ராமச்சந்திரா, ஒன்றிய பொருளாளர் முனிகிருஷ்ணா, தகவல் தொழில் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் காமராஜ், ஒன்றிய செயலாளர் பாலா, கழக நிர்வாகி வேணு, வெங்கடேஷ், மூர்த்தி, மாணவர் அணி ஒன்றிய செயலாளர் லக்ஷ்மன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திமராயா, கலை பிரிவு மாவட்டம் துணை செயலாளர்கள் நாகேஷ், வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ