உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.!

கிருஷ்ணகிரி

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.!

கிருஷ்ணகிரி அருகே உள்ள சாப்பர்த்தி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

அனைத்து தரப்பட்ட மக்களும் பயன்பெறும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட்டு வருகிறது,
இதன் ஒரு பகுதியாக காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றிய சாப்பர்த்தி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

மோரனஅள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்ற இந்த திட்ட முகாமினை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் துவக்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு துறைவாரியாக நடவடிக்கை மேற்கொண்டார். இதன் முன்னதாக அரசு துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

மேலும் இந்த முகாமில் சாப்பர்த்தி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மகளீர் உரிமை தொகை, வீட்டுமனைப் பட்டா, இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம், கல்வி கடன், ரேசன் அட்டை , குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்வு காணுமாறு வேண்டி துறைவாரியாக மனுக்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி பயனடைந்தனர்.
 
இந்த முகாமில் திமுக ஒன்றிய கழக பொறுப்பாளர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், திருமதி பாப்பி பிரான்சிஸ்சோ, தேசிய மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் டாக்டர் சந்திரமோகன் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ