அதிமுக சார்பில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்பட்ட கோல போட்டிகள் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பரிசுகளை வழங்கினார்.!

கிருஷ்ணகிரி

அதிமுக சார்பில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்பட்ட கோல போட்டிகள் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பரிசுகளை வழங்கினார்.!

ஒசூர் அருகே அதிமுக சார்பில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்பட்ட கோல போட்டிகள் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பரிசுகளை வழங்கினார்.

கிருஷ்ணகிரி மேற்கு  மாவட்டம், ஒசூர் அடுத்த பாகலூரில் பொங்கல் பண்டிகையொட்டி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கோல போட்டிகள் நடத்தப்பட்டது.

அதிமுக நிர்வாகிகள் பிரவீன்,ரவி, v2விஜி, முனிரெட்டி, ரங்கா,கிருஷ்ணப்பா, ராஜா, சிவக்குமார் ஆகியோர், ஏற்பாட்டில் ஒன்றிய கழக செயலாளர் ரவி தலைமையில், பாகலூர்  ஜீவா நகரில் 150 க்கும் அதிகமானோர் தங்களது வீடுகளின் முன்பாக வண்ண வண்ண கோலங்களையிட்டு போட்டிகளில் பங்கேற்றிருந்தனர்.

அதிமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் பங்கேற்று போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக கேஸ் அடுப்பு, இரண்டாம் பரிசாக மிக்சி, மூன்றாம் பரிசாக குக்கர், நான்காம் பரிசாக 8 ஆயிரம்  ரூபாய் எட்டு நபர்களுக்கு வழங்கப்பட்டது,  பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசாக ஹாட் பாக்ஸ் வழங்கப்பட்டது, 

நிகழ்ச்சியில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஸ், தொழிலதிபர் மோகன், முன்னாள் கூட்டுறவு சங்க உறுப்பினர் சங்கரப்பா, பாகலூர் கிராம பொதுமக்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ