ராஜிவ்காந்தி கல்லூரி நிறுவனரும், காங்கிரஸ் கட்சி பிரமுகருமான மூர்த்தி, அக்கட்சியில் இருந்து விலகி த.வெ.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டார்.! 

கிருஷ்ணகிரி

ராஜிவ்காந்தி கல்லூரி நிறுவனரும், காங்கிரஸ் கட்சி பிரமுகருமான மூர்த்தி, அக்கட்சியில் இருந்து விலகி த.வெ.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டார்.! 

கிருஷ்ணகிரி ராஜிவ்காந்தி கல்லுாரி நிறுவனரும், காங்கிரஸ்  கட்சி பிரமுகருமான மூர்த்தி அக்கட்சியில் இருந்து விலகி, இளைஞர்களின் எதிர்காலம் த.வெ.க. கட்சியாகத்தான் இருக்கும் என்று அக்கட்சியில் நான் இணைந்துள்ளதாக பேட்டி.

கிருஷ்ணகிரி ராஜிவ்காந்தி கல்லூரி நிறுவனரும், காங்கிரஸ் கட்சி பிரமுகருமான மூர்த்தி, அக்கட்சியில் இருந்து விலகி த.வெ.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டார். 

இது குறித்து கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய மூர்த்தி .......
இளைஞர்களின் எதிர்காலம் த.வெ.க.வாகத்தான் இருக்கும் என்று அக்கட்சியில் நான் இணைந்துள்ளேன். காரணம், உலக நாடுகளை எடுத்துக் கொண்டால், பல பெரிய கட்சிகள் புதிதாக ஆரம்பித்து சில ஆண்டுகளில் அதிகாரத்திற்கு வந்துள்ளனர். அந்த வரிசையில் த.வெ.க.,வும் இருக்கும் என்பதுதான். மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழ்நாட்டில் இளைஞர் சக்தி அதிகமாக உள்ளது. இளைஞர்கள் என்றால் அது த.வெ.க.,தான். தலைமையை நம்பி வாருங்கள் என்பதுதான் இக்கட்சியின் முக்கிய அம்சம். 

தமிழகத்தில், மாணவர்கள், பெற்றோர்கள், விவசாயிகள் ஆகியோரின் பிரச்சனை, பெண்களின் பாதுாப்பு ஆகிய 4 பிரச்னைகள் மட்டுமே உள்ளது. இவற்றை த.வெ.க., ஆட்சிக்கு வந்தவுடன் களையப்படும். த.வெ.க.,வைப் பொறுத்து முதல் தலைமுறை வாக்காளர்கள் தான் குறிக்கோள். மற்ற மாநிலங்களை விட இங்கு உயர்படிப்பு 60 சதவீதமாக உள்ளது. இன்னும் அதிகப்படுத்த வேண்டும். மாவட்டத்திற்கு ஒரு மாடல் பள்ளி என்று இல்லாமல், அனைத்து பள்ளிகளையும் மாடல் பள்ளி ஆக்க வேண்டும் அதை த.வெ.க., செய்யும். 

விவசாயிகளின் பிரச்சனைகளை த.வெ.க. ஆட்சிக்கு வந்த 60 நாளில் நிறைவேற்றும். பொதுமக்கள் எதிர்பார்ப்பது வெளிப்படையான ஆட்சிதான். இரண்டு திராவிட கட்சிகள் செய்யாத அனைத்தையும், த.வெ.க. செய்யும் 
இவ்வாறு அவர் கூறினார்.

இதில், மாவட்ட செயலாளர் முரளிதரன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ