பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் .!

கிருஷ்ணகிரி

பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் .!

பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கழக துணைப் பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான KP முனுசாமி BABL MLA இந்த ஆலோசனை கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நமது கழகம் எவ்வாறு வெற்றி பெற வேண்டும் என்பதை பற்றிய சில நல்ல ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர்K அசோக்குமார் MLA ExMP,  ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் TM தமிழ்செல்வம் MLA அவர்களும் முன்னிலை வகித்தார்கள், அவைத் தலைவர் காத்தவராயன் அவர்கள் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முனிவெங்கடப்பன், திருமதி மனோரஞ்சிதம் நாகராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, மாவட்டத் துணைச் செயலாளர்  சாகுல் ஹமீது மற்றும் மாவட்ட, நகர பேரூர், ஒன்றிய கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், ஒன்றிய, நகர கிளைக் கழகச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ