ப்ரியங்கா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மாவட்டம் காங்கிரஸ் சார்பில், அகில இந்திய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பெண்கள் 108 பால் குடங்களுடன் சிவபெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஊத்தங்கரையில் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கிருஷ்ணகிரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான டாக்டர் செல்லகுமார் ஆகியோருடைய பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது,

காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் ஜே,எஸ், ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின் போது ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பெண்கள் 108 பால் குடங்களை மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பின்னர் ஊத்தங்கரையில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த சிறப்பு பூஜையினைத் தொடர்ந்து அகில இந்திய பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி மற்றும் கிருஷ்ணகிரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான டாக்டர் செல்லகுமார் ஆகியோர் பல்லாண்டு காலம் நீடுழிவாழ வேண்டியும், நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டி சிவபெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

மேலும் இந்த விழாவில் நகர தலைவர் விஜயகுமார், வட்டார தலைவர்கள் திருமால், தனஜெயன், அயோத்தி, லோகநாதன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜெ.என்.குமரேசன், மாவட்ட செயலாளர்கள் கேசவன், காமராஜ், துணைத் தலைவர்கள் மணி, நாகராஜ், மாவட்ட செயலாளர்கள் சாதிக் பாஷா, சட்டமன்ற பொறுப்பாளர் சசிகுமார், பூக்கடை மகி, கோவிந்தசாமி, வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, கதிரவன், ரமேஷ், அண்ணாதுரை, ஏழுமலை, சத்யராஜ், எம் எஸ் கிருஷ்ணன், பைரோஸ், ஜம்பு, குமரவேல், மகேஷ் குமார், கேபிள் டிவி மோகன், குமார், செல்லப்பன், காரப்பட்டு தமிழ், வேணுகோபால், எக்கூர் வெங்கடேசன், முருகேசன், கதிர்வேல், பழனி, பிரசாந்த் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
