தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின், கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் .!
கடலூர்

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின், கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்களது தலைமையில், மாநில பொதுச் செயலாளர் கே.ரமேஷ்குமார் அவர்களது முன்னிலையில் பண்ருட்டியில் நடைபெற்றது.
மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆர்.கே.முருகன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் மக்கள் கருத்து செந்தில், மண்டல பொருப்பாளர் தாமரைக் கண்ணன் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி மாநில யூனியன் தலைவர் தோழர் எம்.பி.மதிமகாராஜா அவர்கள் கலந்து கொண்டார் !
மாவட்ட தலைவராக A1 கண்ணன் அவர்களும் மாவட்ட செயலாளராக சுரேஷ் அவர்களும் அறிவிக்கப்பட்டனர். அவர்களை தொடர்ந்து மாவட்டத்தின் மற்ற நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
உறுப்பினர்களுக்கு தனியார் பஸ் பாஸ், இன்சூரன்ஸ் போன்ற பல திட்டங்கள் வழங்குவது குறித்து முடிவு செய்யப்பட்டது !