ரெட்டிப்பட்டி கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம்.!

கிருஷ்ணகிரி

ரெட்டிப்பட்டி கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம்.!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், கல்லாவி உள்வட்டம், ரெட்டிப்பட்டி கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் வேளாண்மைத் துறை சார்பாக, பயனாளிகளுக்கு குழித்தட்டு நாற்று நடவு தொகுப்புகள் மற்றும் துவரை மினி கிட் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., இன்று (09.07.2025) வழங்கினார். 

உடன், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.தனஞ்செயன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) காளியப்பன், வட்டாட்சியர் மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ