மேலரி கொட்டாய், சிந்தகம்பள்ளி ஆகிய அரசு உயர் நிலைப்பள்ளிகளில் படிக்கும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் நிதி வழங்கும் விழா நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி

மேலரி கொட்டாய், சிந்தகம்பள்ளி ஆகிய அரசு உயர் நிலைப்பள்ளிகளில் படிக்கும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் நிதி வழங்கும் விழா நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி அருகே உள்ள வரட்டனப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் சட்ட மன்ற உறுப்பினர் மதியழகன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரட்டனப்பள்ளி, மேலரி கொட்டாய், சிந்தகம்பள்ளி ஆகிய அரசு உயர் நிலைப்பள்ளிகளில் படிக்கும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் நிதி வழங்கும் விழா நடைபெற்றது.

பர்கூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்குகு அவைத்தலைவர் நாகராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அஞ்சூர் நாகராஜ், திருமதி கடலரசு மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் கலந்துக் கொண்டு சிந்தகம்பள்ளி, மேலரிகொட்டாய், வரட்டனப்பள்ளி ஆகிய பள்ளிகளில் படிக்கும்  11 ஆம் வகுப்பில் படிக்கும் 160 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசுகையில்.....

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பள்ளி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இல்லம் தேடி கல்வி, முதலமைச்சரின் காலை உணவு திட்டமும், மற்றும் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

மேலும் 11 -ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, மாணவ, மாணவிகள் சிறப்பான முறையில் கல்வி கற்று சமுதாயத்தில் சிறந்து விளங்க வேண்டும் என 
 தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா, மாவட்ட கல்வி அலுவலர் ராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்டேசன், பள்ளி தலைமையாசிரியர்கள் ஜெயந்தி, நளினி, ரமேஷ், வடிவேல், நகர செயலாளர்கள்  வேலுமணி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ