இரண்டு ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லாத பிரதமர் தற்போது மணிப்பூர் அமைதிக்கு பாடுபடுவேன் என சொல்வது தான் மோடி வித்தை என குறிப்பிட்ட கி.வீரமணி. !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் தி.க. தலைவர் கீ .வீரமணி இரண்டு ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லாத பிரதமர் தற்போது மணிப்பூர் அமைதிக்கு பாடுபடுவேன் என சொல்வது தான் மோடி வித்தை என்று குறிப்பிட்டார்.
கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகனின் தாயார் கடந்த 15ஆம் தேதி காலமானார். இந்த நிலையில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி மாவட்ட செயலாளர் மதியழகன் இல்லத்திற்கு சென்று அவரது தாயாரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.8
இதை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரண்டு ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லாத பிரதமர் தற்போது மணிப்பூர் அமைதிக்கு பாடுபடுவேன் என சொல்வது தான் மோடி வித்தை என்று குறிப்பிட்டார்.

மேலும் வழக்கமாக வெள்ளம் எல்லாம் முடிந்த பின்பு தான் அவர் ஆறுதலுக்கு செல்வார், மணிப்பூரில் எத்தனை பெண்கள், தாய்மார்கள் அங்கு நிர்வாணப்படுத்தப்பட்டு உள்ளனர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முதல் அனைத்து கட்சிகளும் மணிப்பூர் சென்றுள்ளனர். இதில் சிலரை அந்த பகுதிக்கு விடக்கூடாது என ஆளுமை செய்திருக்கிறார்கள். அந்த காட்சிகள் எல்லாம் முடிந்த பின்பு தற்பொழுது மோடி செல்கிறார் என்றால் மக்களுக்கும் பிரதமர் மோடிக்கும் எவ்வளவு நெருக்கம் மக்கள் நலன் என்று பேசுவது எவ்வளவு இரட்டைப் பேச்சு என்பதை காட்டுகிறது என்றார்.
தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பரப்புரை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் ..... விஜய் கட்சிக்கு கொள்கை என்ன, வேலை திட்டம் என்ன என்று கேள்வி எழுப்பினார். முதலில் அவர் கொள்கையை அறிவிக்கட்டும் சட்டமன்றம் எப்படி இயங்குகிறது, எதிர்க்கட்சி பங்கு பணி என்ன இவைகளுக்கு திட்டம் போடுவதற்கு எப்படி எல்லாம் அமைப்பு இருக்க வேண்டும். இந்த அமைப்புகளுக்கும் அவருக்கும் எவ்வளவு தூரம் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். அதன் பின் அவர் என்ன செய்வார் என்பதை தெரிவிக்கட்டும் என கருத்து கூறினார்.
அப்போது நகர திமுக செயலாளர் அஸ்லாம் உள்ளிட்ட திமுக மற்றும் திக கட்சி சேர்ந்த ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
