மாணவர்களிடையே நடத்திய புத்தாக்க சிந்தனைகளுக்கான போட்டி .!

கிருஷ்ணகிரி

மாணவர்களிடையே நடத்திய புத்தாக்க சிந்தனைகளுக்கான போட்டி .!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், பள்ளிக்கல்வித்துறை இணைந்து பள்ளி மாணவர்களிடையே நடத்திய புத்தாக்க சிந்தனைகளுக்கான போட்டியில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த 3 மாணவிகளுக்கு ரூ.1 இலட்சத்திற்கான காசோலை, மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., இன்று (04.08.2025) வழங்கினார். 

உடன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.அ.சாதனைக்குறள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) திரு.முனிராஜ், மாவட்ட திட்ட மேலாளர் (தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்) திரு.சிவபாரதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ