சாலையோர தடுப்பு சுவரில் கார் மோதி பள்ளத்தில் விழுந்ததில் 2 பெண்கள் பலி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலத்த படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே சாலையோர தடுப்பு சுவரில் கார் மோதி பள்ளத்தில் விழுந்ததில் 2 பெண்கள் பலி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலத்த படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி. ஆன்மிக சுற்றுலா சென்று விட்டு வீடு திரும்பும் போது ஏற்பட்ட சோகம்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த
கிரிஜா, மம்தா, வெங்கடசாமி ரெட்டி, சுனில், ரமேஷ், மௌலியா, கார் ஒட்டுனர் மஞ்சுநாத் உள்பட ஆகிய 7 பேர் வாடகை காரில் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா சென்றனர். சுற்றுலாவை முடித்துக் கொண்டு கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் குந்தாரப்பள்ளி அடுத்த ஜிஞ்சுப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோர தடுப்பு சுவரில் மோதி தரைப்பாலத்தின் கீழ் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த அனைவரும் பலத்த காயமடைந்த நிலையில் கிரிஜா மற்றும் மம்தா ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
மேலும் இந்த விபத்தில் கார் ஓட்டுநர் காரில் சிக்கிக்கொண்டார். அவரை அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குப் பிறகு போராடி மீட்டனர்.
பின்னர் இந்த விபத்தில் பலத்த படுகாயமடைந்த ஓட்டுனர் உள்பட 5 பேரை மீட்ட காவல் துறையினர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பெங்களுருக்கு அனுப்பபட்டனர். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கர்நாடக மாநிலச் சேர்ந்தவர்கள் தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்று விட்டு வீடு திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில் இரு பெண்கள் பலியான சம்பவம் பெரு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்
மாருதி மனோ