தென்காசி 'நெல்லைகருப்பட்டி காபி' கடையில் டீ கப்பை திருடிய சிக்கந்தர் மீது எஸ்.பியிடம் பார்த்தீபன் புகார் மனு .!
தென்காசி
தென்காசி 'நெல்லைகருப்பட்டி காபி' கடையில் டீ கப்பை திருடிய சிக்கந்தர் மீது எஸ்.பியிடம் பார்த்தீபன் புகார் மனு
தென்காசி டிசம்பர் 22
தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை ஐடிஐ முக்கில் நெல்லை கருப்பட்டி காப்பி என்ற பெயரில் டீக்கடை நடத்தி வரும் பார்த்திபன், சோசியல் மீடியா நிறுவனர் சிக்கந்தர், மற்றும் சோசியல் மீடியா நிறுவனர் ரவுடி பேபி சூர்யா மீது தென்காசி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது,
தென்காசி மாவட்டம், குத்துக்கல் வலசை ஐடிஐ முக்கில் நெல்லை கருப்பட்டி காபி என்ற பெயரில் டீக்கடை நடத்தி வருவதாகவும், மேற்படி எதிரிகள் சிக்கந்தர் மற்றும் ரவுடி பேபி சூர்யா ஆகிய இருவரும் டீ குடிப்பதற்காக வந்தார்கள் இரு நபர்களும் டீ யை வாங்கியவாறு டீக்கான பைசா மற்றும் டீ கிளாஸ் ஆகியவற்றை கடையில் கொடுக்காமல் டீ குடித்தவாறு நான்கு சக்கர வாகனத்தை ஒற்றை கையால் மட்டுமே ஓட்டி சென்றார்கள்.
மேற்படி நபர்கள் இருவரும் டீக்கடையில் டீ குடிப்பதற்கான காசையும், கிளாசையும் கொடுக்காமல் மேற்படி கடையின் காவலாளியாக பணியாற்றி வரும் நஸீர் கேட்டதிற்கு அவரையும் வாய்விட்டு சொல்ல முடியாத அளவிற்கு கெட்ட வார்த்தைகளால் அவதூராகவும் பேசி சென்றார்.
இதனால் காவலாளி மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாகி உயிருக்கு அஞ்சிய நிலையில் இருந்து வருகிறார். மேற்படி சம்பவமும் அடிக்கடி நடப்பதாக தெரிய வருகிறது.
மேற்படி நபர்கள் பொது இடத்தில் இதுபோன்ற சதி வேலைகளையும் செய்து வருவதும் தெரிய வருகிறது. அடிக்கடி ரவுடிசம் காட்டியே பிழப்பு நடத்துவதாக தெரிய வருகிறது.
இதனால் அவ்விடத்தில் பொதுமக்கள் பீதி அடைந்தும் அதிக மன உளைச்சலில் இருந்து வருகிறார்கள் மேற்படி சம்பவம் வாட்ஸப்பில் விளம்பரமாக வந்துள்ளது எனவே மேற்படி தவறு செய்த இருவர் மீதும் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு எனக்கும் அவ்விடத்து பொதுமக்களை
மன உளச்சல் நிவர்த்தியும் ஏற்படும் வகையில் உதவுமாறு கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தியாளர்
AGM கணேசன்
