கிருஷ்ணகிரி அரசு பெண்கள் கலைக் கல்லூரி வளாகத்தில், நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்க நிகழ்ச்சி.!
கிருஷ்ணகிரி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் "வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 2 -வது கட்ட விரிவாக்கம் தொடங்கி வைத்து, மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு பெண்கள் கலைக் கல்லூரி வளாகத்தில், நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்க நிகழ்ச்சியில், 40,594 மகளிருக்கு கலைஞர் உரிமை தொகை பெறுவற்கான ஏ.டி.எம். கார்டுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), தே.மதியழகன் (பர்கூர்), டி.ராமசந்திரன் (தளி) ஆகியோர் வழங்கினர்.
உடன் ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், தனித்துணை ஆட்சியர் அபிநயா ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
