ஊரை விட்டு தள்ளி வைத்ததாக பொய் புகார் கொடுத்த ஸ்வீட் மாஸ்டருக்கு எதிராக கிராம பொதுமக்கள் வட்டாட்சியரை சந்தித்து புகார் மனுவினைக் கொடுத்தனர்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஊரை விட்டு தள்ளி வைத்ததாக பொய் புகார் கொடுத்த ஸ்வீட் மாஸ்டருக்கு எதிராக கிராம பொதுமக்கள் வட்டாட்சியரை சந்தித்து புகார் மனுவினைக் கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக பொய் புகார் அளித்ததாக கூறி ஊர் பொதுமக்கள் பர்கூர் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா, மோடிகுப்பத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ், ஸ்வீட் மாஸ்டரான. இவருக்கு சொந்தமான 1.20 ஏக்கர் நிலத்தை அதேபகுதியை சேர்ந்த காஷ்மீரில் சி.ஆர்.பி., போலீசாக பணியாற்றி வரும் முருகேசன் என்பவர் கடந்த, 5 ஆண்டுக்கு முன் வாங்கியுள்ளார். நிலத்தை வாங்க, 20 லட்சம் ரூபாய் விலை பேசப்பட்ட நிலையில், 10 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுத்துள்ளார். மீதிப்பணத்தை பத்திரப் பதிவின்போது தருவதாகவும் முருகேசன் கூறியுள்ளார். ஆனால் பேசியபடி வெங்கடேஷ் பத்திரப்பதிவு செய்யாமலும், வாங்கிய, முன்பணத்தை திரும்ப தராமலும் வெங்கடேஷ் இழுத்தடித்துள்ளார்.
இது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் கந்திகுப்பம் போலீசில் முருகேசன் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, நிலத்திற்கு வாங்க
10 லட்சம் ரூபாய் முன்பணத்தை வட்டியுடன் திரும்ப பெற்று தந்துள்ளனர். இந்நிலையில், வெங்கடேஷ் கடந்த சில வாரங்களுக்கு முன் கட்டப்பஞ்சாயத்து நடத்தி, தன்னை ஊரைவிட்டு தள்ளி வைத்துள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
இது குறித்து விசாரிக்க பர்கூர் தாலுகா அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், மோடிகுப்பத்தை சேர்ந்த, 50 க்கும் மேற்பட்டோர், வெங்கடேஷ் கட்டப்பஞ்சாயத்து நடத்தியதாக பொய் புகார் அளித்ததாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி பர்கூர் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இருதரப்பையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்திய பர்கூர் தாசில்தார் சின்னசாமி மற்றும் கந்திகுப்பம் போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதனால் பர்கூர் தாலுகா அலுவலகத்தில் சுமார் இரண்டு மணி நேரம் பரப்பரப்பாக காணப்பட்டது.
செய்தியாளர்
மாருதி மனோ
