பைரவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு மாபெரும் யாக வேள்வி பூஜை நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி

பைரவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு மாபெரும் யாக வேள்வி பூஜை நடைபெற்றது.!

ஸ்ரீ கால பைரவர் திருக்கோவிலில், பைரவ ஜெயந்தி விழாவினையொட்டி பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கும் பணியினை அறங்காவலர் தலைவர் வேலாயுதன் மற்றும் பி.சி.சேகர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

கிருஷ்ணகிரி அருகே, பெரிய ஏரிக்கரையோரம் சுமார் 815  ஆண்டுகள் பழமை வாய்ந்த ஶ்ரீ காலபைரவர் திருக்கோவில் மற்றும்  சூரண் குட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சௌர்ண ஹர்சணா பைரவர் ஆகிய திருக்கோவில்களில் பைரவர் ஜெயந்தி விழா சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான பைரவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு மாபெரும் யாக வேள்வி பூஜை நடைபெற்றது.

மேலும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான பைரவ சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட புஸ்ப பல்லக்கில் ஸ்ரீ காலபைரவர் மற்றும் ஸ்ரீ சீத்த பைரவர் உற்சவமூர்த்திகளுடன் எழுத்தருளிய நிலையில், திருவீதி உலா நடைபெற்றது.

பாரம்பரிய இசை, மேள தாளங்கள்  மற்றும் மங்கள வாத்தியகளுடன் நடைபெற்ற இந்த திருவீதி உலாவில்,  மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து  ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு,  காலபைரவர் சுவாமியை தரிசனம் செய்தும்  வெள்ளை பூசனிக்காயில் நெய் தீபம் ஏற்றி  வழிபட்டனர்.

மேலும் இந்த விழாவிற்கு  காலை முதல் மாலை வரை வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் ஶ்ரீ காலபைரவர் திருக்கோவிலின் அறங்காவலர் தலைவர் வேலாயுதன்,  கௌரவரத் தலைவர் பி.சி. சேகர் உள்ளிட்ட பலரின் ஏற்பாட்டில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதனை ஶ்ரீ காலபைரவர் திருக்கோவிலின் அறங்காவலர் தலைவர் வேலாயுதன் மற்றும் கௌரவரத் தலைவர் பி.சி. சேகர் ஆகியோர் பக்தர்களுக்கு அன்னதானம் 
வழங்கினர்.

செய்தியாளர் 

மாருதி மனோ