அரசுப் பள்ளியில் பயின்ற கூலித் தொழிலாளியின் மகள் - NEET ல் தேர்ச்சி பெற்று மருத்துவர் ஆகிறார் .!

கிருஷ்ணகிரி

அரசுப் பள்ளியில் பயின்ற கூலித் தொழிலாளியின் மகள் - NEET ல் தேர்ச்சி பெற்று மருத்துவர் ஆகிறார் .!

அரசுப் பள்ளியில் பயின்ற கூலித் தொழிலாளியின் மகள் - NEET ல் தேர்ச்சி பெற்று மருத்துவர் ஆகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம், மாதவலாயத்தைச் சேர்ந்த மாஹீன் அபூபக்கர் மற்றும் சுலைஹா பீவி தம்பதியரின் மகள் பீமா யாஸ்மீன், மாதவலாயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று, 2025 NEET தேர்வில் 431 மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்புக்குத் தேர்வாகியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் 7.5%  இட ஒதுக்கீட்டு வாயிலாக நடைபெற்ற கலந்தாய்வில் தேர்வாகி, நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு (MBBS) பயில இடம் கிடைத்துள்ளது. இவர் சாதித்துள்ள இந்த வெற்றி, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு ஊக்கமளிக்கும் ஒரு முன்னுதாரணம் ஆகும்.

செய்தியாளர்

மாருதி மனோ