தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை சந்தித்து விருப்ப மனு அளித்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள். !

கிருஷ்ணகிரி

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை சந்தித்து விருப்ப மனு அளித்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள். !

கிருஷ்ணகிரி சட்ட மன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.சக்திவேல் சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையிடம் தனது விருப்ப மனுவினை வழங்கினார்.

தமிழகத்தில் வருகின்ற மே மாதம்  நடைப்பெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது தொகுதிக்கான விருப்ப மனுவினை சென்னை சத்திய மூர்த்தி பவனில் கொடுக்கலாம் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்து இருந்தது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட  காங்கிரஸ் கட்சியினர் தங்களது விருப்ப மனுவினை கொடுத்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு அளித்திட முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ்  துணைத் தலைவர் ஆர்.சக்திவேல் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையிடம் தனது விருப்ப மனுவினை வழங்கி வருகின்ற சட்ட மன்றத்தேர்தலில் இளைஞர்களுக்கு ஒரு  வாய்ப்பளிக்க   அகில இந்திய காங்கிரஸ் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ