கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி இன்று சுற்றுப்பயணம். !

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி இன்று சுற்றுப்பயணம். !

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி இன்று சுற்றுப்பயணம்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு திங்கள்கிழமை வரும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

 ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். 

சேலத்தில் இருந்து தருமபுரி, ஒசூா் தேசிய நெடுஞ்சாலை வழியாக ராயக்கோட்டையைச் சென்றடையும் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மாவட்ட எல்லையான காடுசெட்டிப்பட்டியில் அதிமுக வினா் வரவேற்பு அளிக்கிறாா்கள். வேப்பனப்பள்ளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, ஒசூா், ராம் நகா், ராயக்கோட்டை சாலை, சூளகிரியில் திங்கள்கிழமை பேசுகிறாா். 

ஆக.12-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை ஒசூரில் மலை மீதுள்ள சந்திர சூடேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறாா். அதன்பிறகு ஒசூா் மாநகராட்சியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தை திறந்துவைக்கிறாா். அதைத் தொடா்ந்து, தொழில்முனைவோா் கருத்தரங்கில் கலந்துகொண்டு விவசாயிகளுடனும், வணிகா்களுடன் கலந்துரையாடுகிறாா். 

செவ்வாய்க்கிழமை பிற்பகல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை முதல் வட்டச்சாலை வரை ரோடு ஷோ நடத்தி மக்களை சந்திக்கிறாா். 

இதையடுத்து, பா்கூரில் ரோடு ஷோ நடத்தும் அவா் ஊத்தங்கரை வட்டச் சாலை அருகே இரவு 8.20 மணி அளவில் பேசுகிறாா். தொடா்ந்து ஊத்தங்கரையிலிருந்து திருப்பத்தூா் செல்கிறாா்.

செய்தியாளர்

மாருதி மனோ