பால வினாயகர் சிலைக்கு சிறப்பு பூஜையில் ஜாதி மத வேறுபாடுகள் இன்றி ஏராளமான மக்கள் பங்கேற்பு. !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி ராசு வீதியில் மீன் வாகனத்தில் எழுத்தருளிய நிலையில் பிரதீஷ்டை செய்யப்பட பால வினாயகர் சிலைக்கு சிறப்பு பூஜையில் ஜாதி மத வேறுபாடுகள் இன்றி ஏராளமான மக்கள் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று வழக்கம் போல விநாயகர் சதூர்த்தி விழா முன்னிட்டு சாலையோரம், குடியிருப்பு பகுதிகள், கோயில்கள் என பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இதான் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட ராசு வீதியில் திமுக கவுன்சிலரும் நகர திமுக பொறுப்பாளருமான வேல்மணி தலைமையில் 12 ஆம் ஆண்டு வினாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்காக மிகப்பிரமாண்டமான முறையில் ஐதராபாத்தில் தயாரிக்கப்பட்ட மீன் வாகனத்தில் எழுத்தருளிய சிலையை எடுத்து வரப்பட்டு பால வினாயகர் சிலையாக பூஜையுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு யாக பூஜைகள் செய்யப்பட்டு மஹா பூரணாஹூதி ஹோமும் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து பால வினாயகருக்கு சுண்டல், கொழுக்கட்டை உள்ளிட்ட பழவகைகளுடன் சிறப்பு பூஜைகளும், கற்பூர தீபாராதனைகளும் வெகுவிமர்ச்சியாக நடைபெற்றது.
தொடர்ந்து 5 நாள்களுக்கு காலை, மாலை என இருவேளைகள் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மேளத்தாளங்களுடன் விநாயகர் சிலை ஊர்வலம் எடுத்து செல்லபட்டு கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் நிதர்ஜனம் செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தப்பூஜையில் ஜாதி, மத வேறுப்பாடுகள் இன்றி ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டு விநாயகர் பெருமானை வழிபட்டு சென்றனர்.
அப்போது நகர் மன்ற திமுக பொறுப்பாளர் அஸ்லம், உறுப்பினர்களான செந்தில்குமார், மத்தீன், பிர்தோஷ்கான், மதன்ராஜ் மற்றும் வேலு பிரதர்ஸ் குழுவினர்கள், ராசு வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழா முடிவில் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
செய்தியாளர்
மாருதி மனோ