தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு என்னை மன்னித்து விடுங்கள் என அமித்ஷா மேடையில் உருக்கம். !

பா.ஜ.க

தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு என்னை மன்னித்து விடுங்கள் என அமித்ஷா மேடையில் உருக்கம். !

தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட யாத்திரை பிரசார கூட்டத்தின் நிறைவு விழா புதுக்கோட்டை மாவட்டம் பள்ளத்து வயலில் நடைபெற்றது.

இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக பொறுப்பாளர் பியூஸ் கோயல் உள்பட பிற முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் அமித்ஷா பேசியதாவது:

''மாபெரும், மகத்தான, பழமையான, தொன்மையான தமிழ் மொழியில் உரையாற்ற முடியவில்லை அதற்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். தமிழ்நாட்டின் புனித மண்ணுக்கு என்னுடைய நல் வணக்கங்களை தெரிவித்து உரையை தொடங்குகிறேன். 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற இந்த பயணத்தை மேற்கொண்ட நயினார் நாகேந்திரன் நிறைவு விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஏப்ரல் மாதம் 26ம் தேதி பாஜகவின் என்டிஏ தலைமையிலான ஆட்சி அமையும்.

மாபெரும் அவையின் வாயிலாக தமிழக மக்களுக்கு அறைக்கூவல் விடுக்கிறேன். வாருங்கள் பிரதமர் மோடியின் லைமையில் அணிவகுப்போம். பாரதத்தின் வளர்ச்சி பயணத்தில் பங்கு பெறுவோம். தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் அக்டோபர் 12ம் தேதி தொடங்கியது. அனைத்து மட்ட மக்களோடு தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது.

இனி வரும் நாட்களில் பாஜகவும், அதிமுகவும் இன்னும் பிற கூட்டணி கட்சிகளும் வலுவான கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க போகிறோம் எப்பாடுபட்டாவது திமுகவின் ஆட்சியை ஒழித்தே தீருவோம். தமிழ் மொழியை வளர்க்க பாஜக முயற்சி செய்து வருகிறது. பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதி பெயரில் இருக்கை. தேர்வுகளை தமிழில் எழுதும் வசதிகளை பாஜக ஏற்படுத்தி உள்ளது'' என்றார்.