கிருஷ்ணகிரி மாவட்டம் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம்.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம்.!

கிருஷ்ணகிரி மாவட்டம் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டம் முழுமைக்குமான உணவுப் பொருட்களை கையாளக்கூடிய, குழந்தைகள் பாதுகாப்பு துறை, சத்துணவு திட்டம் , அங்கன்வாடி மற்றும் விடுதிகள் உள்ள மாணவர்களுக்கு உணவுகள் வழங்கக்கூடிய அனைத்து தரவுகளிலும், தரமான உணவை கண்காணிக்கவும், அயோடின்நுண்ணூட்ட சத்து,  செறிவூட்டப்பட்ட சத்து கொண்டவையாக இருக்க வேண்டும்.

சாலை ஓரங்களில் விற்பனை மேற்கொள்ளக்கூடிய இறைச்சி உணவுகள் அனைத்திலும், சிந்தடிக் மெட்டீரியல் அல்லாத இயற்கை வண்ணங்கள் கொண்ட கலவைகளை பயன்படுத்துவதாக இருக்க வேண்டும் மற்றவை அப்புறப்படுத்தவும்,நடவடிக்கை மேற்கொள்ளவும் குறிப்பாக கிருஷ்ணகிரி அணைப்பகுதியில் உள்ள மீன் வருவல் கடைகள், உணவு வகைகளில் சுவையூட்டப்பட்ட, கலரிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, களையவும், தரமான உணவை அணுகும் படியும், அவைகளுக்கான தரச் சான்று, பதிவு சான்று அல்லது உரிமைச் சான்று போன்றவை கணக்கில் கொண்டு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் புள்ளி விவரங்கள் அடிப்படையில் பேசி அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து நுகர்வோர் விழிப்புணர்வு நல சங்கத்தின் சார்பில், மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் ஏஜி.ஜாய் பேசுகையில்.....

மாவட்டத்திலுள்ள அனைத்து குளிர்பதன கிடங்கில் உள்ள புளி வணிகர்களுக்கு விற்பனை மேற்கொள்வதில், அவர்களுக்கான உரிமைச் சான்று வழங்கவும், குளிர்பான கிடங்குகளை ஆய்வு செய்யவும், அதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும், நகர மையத்தில் காய்கறி விற்பனை அதாவது ஓசூர் பட்லப்பள்ளி மார்க்கெட், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி கோ-ஆப்பரேட்டிவ் காலனி, பைரவா காலனி போச்சம்பள்ளி, ஊத்தங்கரை போன்ற பகுதியில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக வணிகர்கள் பெற்று அவை சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு ஏற்றி விற்பனை செய்து வருவதை குறித்து அவர்களுக்கு முறையான உரிமை சான்று வழங்கவும், ஏற்கனவே கடந்த ஆலோசனை கூட்டங்களில் கோரிக்கையாக வைக்கப்பட்ட புறவழிச் சாலைகளில் உள்ள நொறுக்கு தீனி கடைகளில் உள்ள நொறுக்கு தீனிகள் தயாரிப்பு தேதி, முகவரி, காலாவதி விலை போன்ற விவரங்கள் இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டி அதனை உடனடியாக குறிப்பிட்ட துறைகள் இணைந்து அவற்றுக்கான விழிப்புணர்வுடன், உரிமைச் சான்று வழங்கியும், எடை அளவு பொட்டலங்கள்ச் சட்டங்கள் -1976 படியும், உணவு பாதுகாப்புத் துறை தரங்கள் சட்டங்கள் 2006 படியும், அவற்றை நடவடிக்கை மேற்கொள்ள உணவு பாதுகாப்பு விதிகள் -2011 அடிப்படையிலும், நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டது.

 இதனைத் தொடர்ந்து மாவட்ட நியமன அலுவலர் மரு. திரு. செந்தில்குமார் அவர்கள் கூட்டக் குழுவில் உள்ள உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று நடைமுறைப்படுத்திடவும், ஆட்சியரின் வழிகாட்டுதல் படியும், அவற்றை முறையாக செய்து வருகிற நாட்களில் வணிகர்களுக்கான உரிமைச் சான்று, பதிவு சான்று, வழங்கியும் கலப்பட உணவு பொருட்களை அடையாளம் கண்டு உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்களில் அவற்றை பறிமுதல் செய்யவும், வழக்கு பதியவும், அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்படும் எனவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர் திரு. ரவிச்சந்திரன் வந்திருந்த அனைத்து துறை அலுவலர்கள் பொறுப்பாளர்களுக்கு நன்றி கூறி நிறைவுற்றது.

செய்தியாளர் 

மாருதி மனோ