கிருஷ்ணகிரி நகரத்தில் தேநீர் கடைகளில் திடீர் ஆய்வு .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் அறிவுரைக்கிணங்க கிருஷ்ணகிரி நகரம் மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜனகர் ஜோதி நாதன், மாவட்ட ஆட்சியர் உத்திரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜனகர் தலைமையில் கிருஷ்ணகிரி நகரத்தில் தேநீர் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன், நுகர்வோர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர்கள் சையத் அஸ்ஹர், ஜெய்சன், மாநில செயலாளர் ரோஷன் ரஷீத் ஆகியோர் கலந்து கொண்டு இந்த ஆய்வில் தேநீர் கடைகளை நேரடியாக பார்வையிட்டு டீ கடைகளில் கலப்படம் மிகுந்த தேநீர் விற்பனை கண்டறியப்பட்டு அபராதம் விடுக்கப்பட்டது.

அண்மையில் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் தமிழ்நாடு முதலமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனு அனுப்பியிருந்தார்.
புகாரின் பெயரில் இன்று 10.11.25 உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஜனகர் ஆய்வினை மேற்கொண்டார். ஆய்வின்போது அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணம் சேர்த்த தேயிலை தூள் கண்டறிந்து அழிக்கப்பட்டது.
மேலும் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்யப்பட்டது. சந்தேகத்திற்குரிய தேயிலை உணவு பகுப்பாய்வு செய்யும் பொருட்டு பகுப்பாய்வு செய்ய பகுப்பாய்வகம் அனுப்பி வைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அண்ணா சிலை அருகே வாணியம்பாடி தேனீர் கடையிலும், ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் தேனீர் கடையில் டீ தூளில் கலப்படம் கண்டறியப்பட்டு மேற்படி டீ தூள்களை குப்பையில் வீசின இந்த நிகழ்வு கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்
மாருதி மனோ
