மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 17 வது மாநில மாநாடு .!
மலேசியா
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 17 வது மாநில மாநாடு, மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.
கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் வேணி தனேந்திரன் மற்றும் மகளிர் நிர்வாகிகள் இணைந்து குத்து விளக்கு ஏற்றி மாநாட்டை துவக்கி வைத்தனர்.


சிறப்பு அழைப்பாளராக மலேசிய நாட்டின் துணை பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹமத் ஜாஹித் ஹமிதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியதோடு, மாநாட்டில் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார்.
சீனாவின் தாய்" என்று அழைக்கப்படும் மதர் பாய் ஷி இன் அவர்கள் சீனாவிலிருந்து வருகை தந்து சிறப்பித்தார்.
சிங்கப்பூர் உட்பட பல நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் பிரதிநிதிகளாக, புது தில்லியில் இருந்து, இந்திய அரசு மற்றும் பாரத பிரதமர் அலுவலகத்தின் சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர், டாக்டர் B.ராமசாமி ( சொந்த ஊர் மதுரை ) மற்றும், சென்னையில் இருந்து, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் ஆகியோர் இந்த பிரம்மாண்டமான நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.
செய்தி
மாருதி மனோ
