ஊத்தங்கரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஊத்தங்கரை ரவுண்டானா அருகில் ஜெயலலிதா படத்திற்கு புகழஞ்சலி.!
கிருஷ்ணகிரி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஊத்தங்கரை ரவுண்டானா அருகில் ஜெயலலிதா படத்திற்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட கழக இணைச் செயலாளர் கண்மணி சிவகுமார், மாவட்ட அம்மா தொழிற்சங்க செயலாளர் ஜே சிவகுமார் ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய செயலாளர் அருணகிரி மத்திய ஒன்றிய செயலாளர் சுரேஷ் மாவட்ட மகளிர் அணி இணைசெயலாளர் முனியம்மா மாவட்ட இளைஞரணி பொருளாளர் முருகன் மிட்டப்பள்ளி ஊராட்சி கழக செயலாளர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
