தென்காசி எஸ் பி யிடம் திமுகவினர், பாஜக நிர்வாகிகள் மீது புகார் மனு.!

தென்காசி

தென்காசி எஸ் பி யிடம் திமுகவினர், பாஜக நிர்வாகிகள் மீது புகார் மனு.!

தென்காசி எஸ் பி யிடம் திமுகவினர், பாஜக நிர்வாகிகள் மீது புகார் மனு

 தென்காசி நவ 21

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம், தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிர் தொண்டரணி சமூக வலைதள பொறுப்பாளர்கள், தென்காசி,சுரண்டை பாஜக நிர்வாகிகள் மீது புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

நாங்கள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிர் தொண்டரணி சமூக வலைதள பொறுப்பாளர்களாக இருந்து வருகிறோம். மனுவில் குறிப்பிட்ட எதிரிகள் எங்கள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் கூறிய கருத்துக்களை அரசியல் புரிதலின்றி திரித்துக் கூறி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள்.

இது எங்கள் கட்சியையும், மாவட்டச் செயலாளரையும், அவ மரியாதை செய்யும் வகையில் உள்ளது. இது சமூகத்தில் பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் உள்ளதால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் 18-11-2025 அன்று இரவு 9 மணி அளவில் சுரண்டை அண்ணா சிலை அருகில் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாகவும், அருகில் பெட்ரோல் பல்க் மற்றும் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் இருப்பதை பொருட்படுத்தாமலும் மிகுந்த சேதம் விளைவிக்கும் விதமாக போக்குவரத்திற்கு சுமார் ஒரு மணி நேரம் இடையூறு கொடுத்து கொடூரமாக செயல் பட்ட பாஜக நிர்வாகிகள் காவல்துறை அனுமதியின்றி மாவட்ட பொறுப்பாளரின் உருவப் படத்தை எரித்தும், செருப்பால் அடித்தும், எதிரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி அவதூறு பேசிய வார்த்தைகள் வாயால் சொல்ல முடியாது. மேலும் அலைபேசியில் கொலை மிரட்டல் விடும் தோனியிலும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும், பேசியும் பதிவிட்டும் தொடர்ந்து செயல் பட்டு வருவதால் ஆர்ப்பாட்டம் செய்த எதிரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவினை தென்காசி தெற்கு மாவட்ட, ஒன்றிய நகர,பேரூர், கிளை, வார்டு, திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அளித்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன்