தென்காசி எஸ்.பி அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம்.!

தென்காசி

தென்காசி எஸ்.பி அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம்.!

தென்காசி எஸ்.பி அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம்

மாவட்ட எஸ்.பி தலைமையில் நடைபெற்றது

தென்காசி ஜுலை 24


தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த்  தலைமையில் பொது மக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கப்பட்டது.

மேலும் பொதுமக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்திட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் குறை தீர்ப்பு கூட்டத்தில் பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர்கள் லோகநாதன் மற்றும்  ப்ரீத்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன்