கொடிக்கால் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வீரபாகு சேனைத் தலைவர் வீர திருவிழா.!
தென்காசி
மேலகரத்தில் கொடிக்கால் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வீரபாகு சேனைத் தலைவர் வீர திருவிழா
தென்காசி நவ 20
தென்காசி மாவட்டம், மேலகரம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து தென்காசி மாவட்ட கொடிக்கால் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், வீரபாகு சேனைத் தலைவர் வீர திருவிழா நடை பெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு நிறுவன தலைவர் முத்து விஜயன் சேனைத் தலைவர் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் முருகன் சேனைத்தலைவர், இளைஞர் அணி பொறுப்பாளர் தென்காசி வினோத் சேனைத் தலைவர், திமுக தென்காசி அன்பு பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து சேனைத் தலைவர் வரவேற்புரை ஆற்றினார். பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, மாவட்ட செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினர்.

மேலும் நிறுவன தலைவர் முத்து விஜயன் சேனைத் தலைவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், எங்கள் சமுதாயத்திற்கும், எங்கள் கட்சிக்கும் எந்தக் கட்சியினர் ஆதரவு தெரிவிக்கிறார்களோ அவர்களுடன் 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்போம் என கூறினார்.
இந் நிகழ்ச்சியில் தமிழ்நாடு தேசிய சுதேசி இயக்க மாநில இளைஞரணி செயலாளர் வசந்த், தூத்துக்குடி மாவட்ட புதிய நீதி கட்சி செயலாளர் வள்ளிநாயகம், கொடிக்கால் மக்கள் முன்னேற்றக் கழக தென்காசி மாவட்ட நிர்வாகிகள் மாதா, விஜய், மாரியப்பன், கார்த்தி, பாஸ்கர், அருணாச்சலம், முத்து, நவீன், மோகன்ராஜ், இசக்கி ராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில அமைப்பு செயலாளர் அருணாச்சலம் சேனைத் தலைவர் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்
