கல்வாரி பவுண்டேசன் அறக்கட்டளை சார்பில் ஏழை மக்களுக்கு இல்லம் தேடி உணவு வழங்கும் துவக்க விழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் மூலமாக ஏழைகளுக்கு உணவு மற்றும் உடைகள் வழங்குவதற்கான வாகனத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் தலைவர் அருள் தந்தை அருண் மற்றும் எழும்பி பிரகாஷின் ஜெயசிங் ஆகியோர் நல்லாசியுடன் கல்வாரி பவுண்டேசன் அறக்கட்டளை சார்பில் ஏழை மக்களுக்கு இல்லம் தேடி உணவு வழங்கும் துவக்க விழா நடைபெற்றது.


கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த விழாவின் போது ஏழை எளிய மக்களுக்கு இல்லம் தேடி உணவு மற்றும் உணவுப் பொருள்கள், உடைகள் வழங்குவதற்கான வாகன சேவையை மாவட்ட ஆட்சியர் திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மாநில பொதுக் குழு உறுப்பினருமான சுப்பிரமணியன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்ததோடு, நூற்றுக்கணக்கான ஏழை, எளிய மக்களுக்கு உணவு, உடை மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.
இந்த துவக்க விழாவின் போது எழும்பி பிரகாசி பேராயத்தின் பொறுப்பாளர்களான எபினேசர் இன்பநாதன், ரபிராபர்ட், புகழேந்தி, டேவிட், ராஜேஷ், தேவதாஸ், ஜெயராஜ், வல்லரசு, ராஜேந்திரன், தேவஇந்திரா சம்பத், எஸ்தர் ஈஸ்வரி, லொகர்னா ஜேசுதாஸ், சுரேஷ் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அகில இந்திய பொது செயலாளர் டேனியல் சக்கரவர்த்தி, மாவட்டத் தலைவர் ஜேசுதாஸ் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
