ஆலங்குளத்தில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.!

தென்காசி

ஆலங்குளத்தில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.!

ஆலங்குளத்தில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மாவட்டச் செயலாளர் பழனி சங்கர் பங்கேற்பு 

தென்காசி டிச 26

தென்காசி தெற்கு மாவட்ட தேமுதிக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பழனி சங்கர் தலைமை வகித்தார்  

மாவட்ட அவைத் தலைவர் சங்கரலிங்கம், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சந்துரு சுப்பிரமணியம், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முக்கூடல் மாதவன் பிரின்ஸ், தென்காசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சுரண்டை சங்கரலிங்கம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சரவணன், மாவட்டத் துணைச் செயலாளர் மாரிச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக துணை பொது செயலாளர் சந்திரன், தென் மண்டல தேர்தல் பொறுப்பாளர் தாமோதரன், துணை பொறுப்பாளர் டலஸ், தென்காசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சிறப்புரை ஆற்றினர்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் தேமுதிக போட்டியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 

இந்நிகழ்ச்சியில் ஆலங்குளம் தென்காசி கடையநல்லூர் ஒன்றிய செயலாளர்கள் பேரூராட்சி செயலாளர்கள்  நகராட்சி செயலாளர்கள் அணி நிர்வாகிகள் மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்   ஆலங்குளம் பேரூர் கழக செயலாளர் நன்றிகூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்